செய்திகள் மலேசியா
ரமலான் முதல் நாளில் உறவுகள் வலுப்படும் இனிய தருணங்கள்
கோலாலம்பூர்:
ரமலானின் முதல் நாளும் பள்ளி விடுமுறையும் இணைந்ததால், இஸ்லாமியர்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் சேர்ந்து வெளிப்புறங்களில் நோன்பு திறந்துள்ளனர்.
பல மாநிலங்களில் மக்கள் திறந்த வெளிகளில் அமைதியான சூழலில் இப்தார் செய்து, மற்றவர்களுடன் உணவைப் பகிர்ந்து மகிழ்ச்சியை அதிகரித்தனர்.
தலைநகரில், மெர்டேக்கா சதுக்கத்தில் மாலை நேரம் மேகமூட்டமாக இருந்த போதிலும், மக்கள் அங்கு மாலை 6.30 மணியிலிருந்தே மஃரிப் நேரத்திற்காகக் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திரெங்கானுவில், டத்தாரான் ஷாஹ்பண்டார், ஜம்பத்தான் அங்காட் (Drawbridge), லாகுன் கோலா இபாய், பந்தாய் பாத்து புருக் ஆகிய இடங்கள் குடும்பத்துடன் இப்தார் செய்ய மக்களின் முக்கியத் தேர்வாக இருந்தன.
பினாங்கில், பகான் அஜாம் பகுதியில் மாலை 6 மணியளவில் மழை பெய்த போதிலும், பொது மக்கள் தத்தம் குடும்பங்களுடன் அங்கு திரண்டனர்.
பாஹாங்கில், மாநில மசூதி, 'Mahkota Square', குவாந்தான் 188, மக்கள் பாடாங் மாநகராட்சி மைதானம் 1-ல் இப்தார் செய்தனர்.
நேற்று புனித மாதத்தின் முதல் நாளையொட்டி பொது மக்கள் வெளிப்புறங்களில் நோன்பு திறந்தது ஒற்றுமைமிக்கச் சமூகத்தை உருவாக்க வழிவகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 20, 2026, 12:10 pm
சண்டாக்கானில் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது
February 20, 2026, 12:08 pm
நூற்றுக்கணக்கான வனவிலங்கு உறுப்புகள் பறிமுதல்: வெளிநாட்டவர்களுக்குக் கடும் தண்டனை
February 20, 2026, 12:05 pm
'துங்கு புத்ரா' இடைநிலைப்பள்ளியின் ஆசிரியர் குடியிருப்பில் தீ விபத்து: வீடும் வாகனமும் தீக்கிரையாகின
February 20, 2026, 10:43 am
நாட்டின் வளமான எதிர்காலத்திற்கு பொறுப்பான அரசியல் மிக அவசியமாகும்
February 20, 2026, 10:42 am
“நாட்டில் வேலைவாய்ப்பு நிலை மேம்பாடு அடைய வாய்ப்புள்ளது”: பொருளாதார ஆய்வாளர்
February 20, 2026, 10:07 am
சபா, சரவாக்கில் இடியுடன் கனமழை பெய்யும்: வானிலைத் துறை எச்சரிக்கை
February 20, 2026, 9:52 am
ரமலான் சந்தைகளில் சுகாதார விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படும்: டத்தோ ஹில்மி ஓத்மான்
February 19, 2026, 5:54 pm
மீனவர்களாக நடித்து, இந்தோனேசியாவுக்கு போதைப்பொருள் கடத்திய கும்பல் கைது
February 19, 2026, 5:20 pm
