நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

'துங்கு புத்ரா' இடைநிலைப்பள்ளியின் ஆசிரியர் குடியிருப்பில் தீ விபத்து: வீடும் வாகனமும் தீக்கிரையாகின

லங்காவி:

ரமலான் மாதத்தின் முதல் நாளில், நேற்று இப்தார் நேரத்துக்குப் பிறகு ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு வீடும் வாகனமும் முழுமையாகச் சேதமடைந்தன.

இந்தச் சம்பவம் இரவு சுமார் 7.45 மணியளவில், பாடாங் மட்சிராட் பகுதியில் உள்ள 'துங்கு புத்ரா' இடைநிலைப்பள்ளியின் ஆசிரியர் குடியிருப்பில் நிகழ்ந்துள்ளது. இதில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 7.52 மணிக்கு தமது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததாக லங்காவி மண்டலம் 4 தீயணைப்பு, மீட்பு நிலையத் தலைவர், தீயணைப்பு அதிகாரி முஹம்மத் சம்ரி அப்துல் கனி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, பாடாங் மட்சிராட் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வாகனங்களுடன் அதிகாரிகள் மூன்று நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்தனர்.

“தீ விபத்தில் 324 சதுர மீட்டர் பரப்பளவுள்ள, ஒரே மாடி கொண்ட அரை இணைந்த வகை ஆசிரியர் குடியிருப்பு வீடானது பாதிக்கப்பட்டுள்ளது.

“அந்த வீட்டில் சுமார் 20 சதவீத சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு 'Volkswagen Polo' கார் சுமார் 90 சதவீதம் எரிந்து சேதமடைந்துள்ளது,” என அவர் அறிக்கையில் தெரிவித்தார்.

இரவு 8.17 மணியளவில் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு, மேலதிக ஆய்வுப் பணிகள் (overhaul) மேற்கொள்ளப்பட்டன.

இரவு 10.01 மணியளவில் மீட்பு நடவடிக்கைகள் முழுமையாக முடிக்கப்பட்டன. தீ விபத்துக்கான காரணமும் இழப்பீடு தொகை குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset