நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“நாட்டில் வேலைவாய்ப்பு நிலை மேம்பாடு அடைய வாய்ப்புள்ளது”: பொருளாதார ஆய்வாளர்

கோலாலம்பூர்:

நாட்டின் வேலை வாய்ப்பு இல்லாதவர்களின் விகிதம் தொடர்ந்து குறைந்து, 2026-இல் சராசரியாக இரண்டு புள்ளி எட்டு விழுக்காடு ஆக இருக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

நிலையான பொருளாதார வளர்ச்சியும், தனியார் முதலீடுகளும் அதிகரித்து வருவது இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. மேலும், கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுவதால், வேலைவாய்ப்பு சந்தையின் நிலைத்தன்மை மேலும் வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பற்றோர் விகிதம் மூன்று விழுக்காடு என்ற குறைந்த நிலையில் நிலைத்திருந்தது. இது, தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதார மீட்பில் அரசின் முயற்சிகள் வெற்றியடைந்ததை காட்டுகிறது.

அதே காலகட்டத்தில், நாட்டின் மொத்த தொழிலாளர் எண்ணிக்கை 17.13  இலட்சமாக உயர்ந்ததாகவும், பெரும்பாலான முக்கிய பொருளாதாரத் துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில், அரசு நடத்தும் வேலைவாய்ப்பு இணைப்பு இணையத் தளம் மூலம் ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளதாகவும், இதனால் திறன் பொருத்தமின்மை குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset