நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா, சரவாக்கில் இடியுடன் கனமழை பெய்யும்: வானிலைத் துறை எச்சரிக்கை

கோலாலம்பூர்:

இன்று சபா மாநிலத்தின் பல பகுதிகளில் கடுமையான தொடர்ச்சிக் கனமழை பெய்யும் என வானிலைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சண்டாக்கான் பகுதியிலுள்ள பெலுரான், குடாட் பகுதியிலுள்ள கோத்தா மருடு, பிதாஸ் ஆகிய இடங்கள் அதிகமாக பாதிக்கப்படலாம்.

இதனிடையே, சரவாக் மாநிலத்தின் கூச்சிங் நகரிலும், சபா மாநிலத்தின் உள்பகுதிகளான நபாவான், தவாவ் பகுதிகளிலும் இன்று காலை 11 மணி வரை இடியுடன் கூடிய கனமழையும் பலத்த காற்றும் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்தில் இருபது மில்லிமீட்டருக்கு மேல் மழை பெய்யும் அறிகுறிகள் காணப்படும் போது இவ்வகை எச்சரிக்கைகள் வழங்கப்படுவதாகவும், இந்த இடியுடன் கூடிய மழைக்கான எச்சரிக்கை அதிகபட்சம் ஆறு மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும் என்றும் வானிலைத் துறை தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் சமீபத்திய வானிலை நிலவரங்களை வானிலைத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம், வானிலை துறையின் சமூகத் தொடர்பு ஊடகங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். மேலும், தகவல்களுக்கு 1-300-22-1638 என்ற உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset