நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊழல் தலைவர்களை மலேசியர்கள் புறக்கணிக்க எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் அழைப்பு

கோலாலம்பூர்:

ஊழல் தலைவர்களை மலேசியர்கள் புறக்கணிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மலேசியர்கள் அரசியல் மீதான ஆர்வத்தை விட்டுவிடக் கூடாது என்றும், 15ஆவது பொதுத்தேர்தலில் தவறான தலைவர்களுக்கு வாக்களித்தால் ஊழல் மேலும் நீடிக்கும் என்றும் அவர் கூறினார்.

நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவருமான அவர், அடுத்த தேர்தலில் ஊழல் செய்யாத அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுத்து, மாற்றத்தை ஏற்படுத்தும் துணிச்சலுடன் மலேசியர்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

"அரசியலைப் புறக்கணிப்பது என முடிவெடுத்தால், நாளை நமது பிள்ளைகளின் எதிர்காலம் ஊழல் புரிபவர்களால் தீர்மானிக்கப்படும்.

"நாம் மலாய்க்காரர்கள், இந்தியர்கள், சீனர்கள் என யாராக இருந்தாலும் நமக்கு ஒரு தேர்வு உள்ளது. ஊழல் புரியும் அரசியல்வாதிகளால் மக்கள் அவதிப்பட அனுமதிக்கக் கூடாது.

"ஊழல் அரசியல் புரியும் அரசாங்கங்களை பக்ககாத்தான் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. ஊழல் என்பது இனப் பிரச்சினையல்ல.

"அதிகார துஷ்பிரயோகம், ஊழல் காரணமாக அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். சிலர் நீதித்துறையைக் கூட தாக்குகிறார்கள். தொடக்கம் முதலே நீதியை நிலைநாட்டுவதற்கும், மக்கள் பிரச்சினைகளை உரக்கச் சொல்வதற்கும் பக்காத்தான் முன்வந்திருக்கிறது," என்று அன்வார் இப்ராகிம் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset