நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர்களாக புவனேஸ்வரன் உட்பட 23 பேர் பதவியேற்றனர்

கோலகுபு பாரு:

உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் 2026-2027ஆம் ஆண்டிற்கான உறுப்பினர்களாக 23 பேர் இன்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

கெஅடிலான் சார்பில் 10 பேரும் ஜசெகவைப் பிரதிநிதித்து 8 பேரும் அமானா கட்சியை சேர்ந்த 5 பேரும் இதில் அடங்குவர்.

ப. புவனேஸ்வரன், வீ. முருகன், ச. ஸ்ரீகாந்த் ஆகியோர் கெஅடிலானை சேர்ந்த இந்திய கவுன்சிலர் உறுப்பினர்களாவர்.

ஜசெகவைப் பிரதிநிதித்து திலகேஸ்வரி, சின்னையா, ராஜேஷ் ராவ் என மூவர் உட்பட அமானா கட்சியை சேர்ந்த துரை அன்பழகன் என்பவரும் பதவி உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

கெஅடிலானை சேர்ந்த நகராண்மைக் கழக உறுப்பினர்களுக்கு ப. புவனேஸ்வரன் தலைமையேற்கிறார்.

உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் தலைவர் ஜூலைஹா பிந்தி ஜமாலுடின் முன்னிலையில் இன்று காலை பதவி ஏற்பு நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

உலு சிலாங்கூர் தொகுதி கெஅடிலான் கட்சியின் தலைவர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பதவி ஏற்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset