நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இனம், மதத்தை அரசியல் மூலதனமாகப் பயன்படுத்தி அக்மால் விளையாடுகிறார்: டாக்டர் சத்தியபிரகாஷ் சாடல்

கோலாலம்பூர்:

அரசியல் ஆதாயத்திற்காக மத,  இனக் கதைகளை அம்னோ இளைஞர் தலைவர் அக்மால் சாலே பயன்படுத்தி வருகிறார்.

சிலாங்கூர் கெஅடிலான் தேர்தல் இயக்குநர் டாக்டர் சத்தியா பிரகாஷ் நடராஜன் இவ்வாறு சாடினார்.

ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அம்னோ சமீபத்தில் விடுத்த அழைப்புக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறினார்.

நாடு துரோகம் செய்யப்பட்டதாக சித்தரிக்க முயற்சிக்கும் கதை அடிப்படையற்ற, பொறுப்பற்ற அரசியலின் ஒரு வடிவமாகும்.

இதுபோன்ற அறிக்கைகள் உணர்ச்சிவசப்படுவது மட்டுமல்லாமல், நல்லிணக்கத்திற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும், இதுபோன்ற பேச்சுக்கள் எப்படிப்பட்ட விளைவுகளை உண்டாக்கும் என்பதை உணராமல் அவர் விளையாடிக் கொண்டிருக்கிறார். அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே இஸ்லாத்தையும் மலாய் பிரச்சினையையும் தெளிவாகப் பயன்படுத்துகிறார்.

கூட்டாட்சி மதமாக இஸ்லாத்தின் நிலை, மலாய்க்காரர்கள்,  பூமிபுத்ராக்களின் சிறப்பு உரிமைகள் தற்போதைய நிர்வாகத்தின் கீழ் எந்த உண்மையான அச்சுறுத்தலும் இல்லாமல் பாதுகாக்கப்படுகின்றன.

மதத்தை அரசியல் மூலதனமாகப் பயன்படுத்தும் செயல் சமூகத்தைப் பிளவுபடுத்துமே ஒழிய  மக்களை ஒன்றிணைக்காது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset