நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தனிநபர் என்றால் பிரச்சினை வரும் என்று தேவஸ்தானத்திற்கு தெரியாதா?; பத்துமலை மின் படிக்கட்டு விவகாரத்தில் பாப்பா ராயுடு உண்மை தெரியாமல் பேசுகிறார்: டத்தோ சிவக்குமார் சாடல்

பத்துமலை:

பத்துமலை மின் படிக்கட்டு திட்டம் தொடர்பான விவகாரத்தில் பாப்பா ராயுடு உண்மை தெரியாமல் பேசுகிறார்.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான அறங்காவலர் டத்தோ ந. சிவக்குமார் இவ்வாறு சாடினார்.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் பத்துமலை மேல்குகைக்கு செல்ல மின் படிக்கட்டை அமைக்க திட்டம் மேற்கொண்டு வருகிறது.

இத்திட்டத்திற்கு அனுமதி கோரி கோம்பாக் நில அலுவலகத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

ஆரம்பத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் பெயரில் தான் விண்ணப்பம் செய்யப்பட்டது.

ஆனால் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் நீதிமன்றத்தின் கீழ் செயல்படுகிறது.

தேவஸ்தானத்திற்கு ஆர்ஓஎஸ் பதிவு எண் இல்லை என அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் தான் நில அலுவலகமே ஆலயத் தலைவர் பெயரில் விண்ணப்பம் செய்யுங்கள் என ஆலோசனை வழங்கியது.

ஆலயத் தலைவர் பெயர் போட்டால் பிற்காலத்தில் தனிநபர் பிரச்சினை வரும் என்று எங்களுக்கு தெரியும்.

ஆக ஆலயத் தலைவருக்கு இந்த அதிகாரம் வழங்கி தேவஸ்தான அறங்காவலர்கள் கையெழுத்திட்டு அதை நீதிமன்றத்தின் ஒப்புதலும் பெறப்பட்டது.

அதன் பின்பே திட்டத்திற்கு அனுமதி கோரி விண்ணப்பம் செய்யப்பட்டது.

இதில் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் செய்த தவறு என்னவென்று எனக்கு தெரியவில்லை.

மேலும் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் தான் நாங்கள் நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளோம்.

இவ்விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது.

பாப்பா ராயுடு தற்போது சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற முக்கிய பொறுப்பில் உள்ளார்.

அவருக்கு எப்படி இந்த விவகாரம் தெரியாமல் போனது. அப்படி தெரியவில்லை என்றால் எங்களை கேட்கலாம்.

அதை விடுத்து தனிநபர் பெயரில் விண்ணப்பம் செய்தோம் என பிரச்சினையை திசை திருப்ப வேண்டாம்.

முடிந்தால் உதவி செய்யுங்கள். இல்லை என்றால் அமைதிகாக இருங்கள்.

தவறான தகவல்களை செல்ல மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என டத்தோ சிவக்குமார் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்



தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset