நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

100 ரிங்கிட் சாரா உதவித் தொகை; பிப்ரவரி 9ஆம் தேதி வழங்கப்படும்: பிரதமர்

புத்ராஜெயா:

மக்களுக்கான 100 ரிங்கிட் சாரா உதவித் தொகை வரும் பிப்ரவரி 9 வழங்கப்படும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.

18 வயது, அதற்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் 100 ரிங்கிட் அடிப்படை ரஹ்மா உதவித் தொகையை அரசு வழங்குகிறது.

அதன் அடிப்படையில் இந்த உதவித் தொகை அடுத்த  பிப்ரவரி 9 அன்று மக்களுக்கு வழங்கப்படும்.

சீனப் புத்தாண்டு, ரமலான் மாதத்திற்கான தயார் நடவடிக்கையாக இந்த உதவி மக்களுக்கு வழங்கப்படும்.

இந்த ஆண்டு சாரா திட்டத்தில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 22 மில்லியன் மலேசியர்கள் அடங்குவர்.

அவர்களுக்கு பிப்ரவரி 9 ஆம் தேதி நாங்கள் நிதி வழங்குவோம்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது புத்தாண்டு செய்தியை வழங்கும் போது இதை அறிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset