நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலை தைப்பூச விழாவை முன்னிட்டு 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்: பாப்பா ராயுடு

செலாயாங்:

பத்துமலை தைப்பூச விழாவை முன்னிட்டு சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு இதனை கூறினார். 

வரும் பிப்ரவரி 1ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ்க் கடவுள் திருமுருகப் பெருமானுக்கு தைப்பூசம் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் உலகப்புகழ்பெற்ற பத்துமலை திருத்தலத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாட்டில் வரும் ஜனவரி 31ஆம் தேதி இரவு 8.00 மணிக்கு மேல் பத்துமலை வளாகத்தில் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் வழங்கப்படும்.

அதை தொடர்ந்து சமய இசை நிகழ்ச்சியும் இடம் பெறும்.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி உட்பட சிலாங்கூர் மாநில சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரவு 8.00 மணிக்கு மேல் சிறப்பு வருகை புரிகிறார்கள்.

இந்த விழாவில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரிக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்யப்படும். அதேவேளையில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள இந்து கோவில்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

இவ்வாண்டும்  சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 50  இந்து கோவில்களுக்கு குறைந்தது 4 லட்சம் ரிங்கிட் மானியம் வழங்கும் முதல் கட்ட நிகழ்வாக இது விளங்கும்.

இன்று செலாயாங் நகராண்மைக் கழக மண்டபத்தில் நகராண்மைக் கழக அதிகாரிகள் இடையே நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset