நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமரின் பதவிக்காலத்தை கட்டுப்படுத்தும் மசோதாவை அரசு தாக்கல் செய்ய உள்ளது: பிரதமர் அன்வார்

புத்ராஜெயா:

பிரதமரின் பதவிக்காலத்தைக் கட்டுப்படுத்தும் மசோதாவை வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அரசு தாக்கல் செய்ய உள்ளதாக டத்தோஸ்ரீ பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார்.

நிதி அமைச்சரான அன்வார், அந்த மசோதா மூலம் பிரதமரின் பதவிக்காலம் அதிகபட்சம் 10 ஆண்டுகள் அல்லது இரண்டு பதவிக்காலங்களைத் தாண்டக் கூடாது என்பதை உறுதி செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில், பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகள் அல்லது இரண்டு பதவிக்காலங்களாக கட்டுப்படுத்த அரசியலமைப்பை திருத்த வேண்டும் என்ற டிஏபி (DAP) கட்சியின் கோரிக்கைக்கு அன்வார் ஆதரவு தெரிவித்திருந்தார்.

இருப்பினும்,  இக் கட்டுப்பாட்டை அமலுக்குக் கொண்டு வர அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவும் பெறுவது மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறினார்.

- சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset