நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரா மாநிலத்தில் மின் சிகரெட்டுக்கான புதிய விற்பனை உரிமம் புதுப்பிக்கப்படாது: சிவநேசன்

ஈப்போ -

பேரா மாநிலத்தில் இவ்வாண்டு தொடக்கம் மின் சிகரெட்டுக்கான புதிய விற்பனை உரிமம் புதுப்பித்தல் ஆகியவைக்கு அனுமதி வழங்கப்படாது என்று பேரா மாநிலத்தில் சுகாதார பிரிவிற்கு பொறுப்பேற்றுள்ள ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் கூறினார்.

பொது மக்களிடையே குறிப்பாக மாணவர்கள் மத்தியில் பெரும் சிக்கலாய் எழுந்துள்ள மின் சிகரெட் பயன்பாடு அவர்களின் ஆரோக்கியத்தையும் உடல்நலத்தையும் பெரும் அளவில் பாதிக்கலாம் என்பதை உணர்ந்து பேரா மாநில அரசு இம் முடிவினை எடுத்துள்ளது.

ராஜா பெர்மைசுரி பைனுன் மருத்துவமனையின் புதியதாக நியமனம் செய்யபட்டுள்ள இயக்குனர் டாக்டர் ஃபக்ரூடின் மரியாதை நிமித்தம் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு பேசினார்.

இவ்விவகாரத்தை கடந்தாண்டு செப்டம்பர் திங்களில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கூட்டத்தில் தாக்கல் செய்து அது இவ்வாண்டு தொடக்கம் அமலுக்கு வரும் என்பதை கடந்தாண்டே உறுதியும் செய்திருந்தார்.

இச்செயல்பாடு வருங்காலத்தில் பேரா மாநிலத்தில் மின் சிகரெட்டுக்கான பயன்பாட்டிற்கே முற்றுப்புள்ளி வைக்கப்படலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

மேலும் பேராக்கில் விற்பனையை நிறுத்த மின் சிகரேட்டுக்கான விற்பனையாளர்களுக்கு அக்டோபர் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள் தூரநோக்கு சிந்தனையும் மக்களின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பேராவில் டிங்கி அபாயம் குறைந்துள்ளது. அதற்குறிய நடவடிக்கையை சுகாதாரிகள் மேற்கொண்டுள்ளதை வெகுவாக பாராட்டினார்ர்

கடந்த 2024 ஆம் ஆண்டு டிங்கி நோய் கடண்டவர்களின் எண்ணிக்கை 6924 இருந்தது. கடந்த ஆண்டு அதன் எண்ணிக்கை 1853 ஆக பதிவாகியுள்ளது.

அதேபோன்று பல மாவட்டங்களிலும் மிக குறைந்துள்ளதையும் சுட்டிக்காட்டிப் பேசினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset