நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமரின் 2026 புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மக்களுக்கான முக்கிய அறிவிப்புகள்

புத்ரா ஜெயா:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று புத்ராஜெயாவில்  வெளியிட்ட 2026 புத்தாண்டு செய்தியின் சில சிறப்பம்சங்கள் வருமாறு:

1.  18 வயது,  அதற்கு மேற்பட்ட குடிமக்களுக்கு சாரா 100 ரிங்கிட் உதவித் தொகை வரும் பிப்ரவரி 9ஆம் தேதி வழங்கப்படும்.

2. 2026 ரஹ்மா உதவித் தொகை  கட்டம் 1 செலுத்துதல் வரும் ஜனவரி 20 முதல் செலுத்தப்படும்

3. குறு, சிறு,  நடுத்தர நிறுவனங்களுக்கு 1.5 மில்லியன் ரிங்கிட் வரையிலான விற்பனை மதிப்புகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.

4. 1 மில்லியன் ரிங்கிட் விற்பனை மதிப்புள்ள நிறுவனங்களுக்கு அபராதம் இல்லாமல் மின்-விலைப்பட்டியலை செயல்படுத்துவதற்கான மாற்றக் காலத்தை அரசாங்கம் ஒரு வருடத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட்டாக நீட்டிக்கும்

5. வாடகை மீதான சேவை வரி எட்டு சதவீதத்திலிருந்து ஆறு சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

6. ரஹ்மா மடானி விற்பனை வரும் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு சட்டமன்றத்திலும் மாதத்திற்கு மூன்று முறை நடைபெறும்

7. ஒவ்வொரு மாணவருக்கும் 150 ரிங்கிட் ஆரம்பப் பள்ளி உதவியை அந்தந்தப் பள்ளிகளில் பெறலாம்.

8.  சீனப் பள்ளிகளுக்கு 80 மில்லியன் ரிங்கிட்டும் தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 மில்லியன் ரிங்கிட்டும்  பள்ளி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படும்.

9. 10 ஆண்டுகளாக எந்த உயர்வும் இல்லாத நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் அதிகரிக்கப்படும்

10. பொது சேவைகளின் தரத்தை மேம்படுத்த டிஜிட்டல் அமைப்புகள் தீவிரமாக செயல்படுத்தப்பட வேண்டும்.

11. தகவல் சுதந்திர மசோதா இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.

11. தகவல் சுதந்திர மசோதா இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.

12. அரசு வழக்கறிஞர்கள், ஏஜி இடையே அதிகாரங்களைப் பிரிப்பது தொடர்பான சட்டம் இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset