செய்திகள் மலேசியா
சபா, சராவாக் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு
கூச்சிங்:
சபா, சராவாக் மாநிலங்களில் தற்காலிக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று காலை சிறிதளவு அதிகரித்துள்ள நிலையில் ஜொகூர் மாநிலத்தில் எண்ணிக்கை மாற்றமின்றி உள்ளது.
சபாவில், நேற்று 510 ஆக இருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று காலை 513 ஆக உயர்ந்துள்ளதாக சபா பேரிடர் மேலாண்மைக் குழு அறிவித்துள்ளது.
பியூஃபோர்டில், எட்டு கிராமங்களைச் சேர்ந்த 120 குடும்பங்களில் இருந்து 338 பேர் இன்னும் டேவான் செலாகோன் நிவாரண மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், கோத்தா கினபாலுவில், கம்பூங் டாராவிலுள்ள தேவான் மஸ்ஜித் அல்-முனீர் நிவாரண மையத்தில் 53 குடும்பங்களைச் சேர்ந்த 158 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
“கோத்தா பெலூட் மாவட்டம் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அங்குள்ள தேவான் கம்பூங் லெந்திகி வெள்ள துயர் துடைப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது. நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்,” என அந்த குழு தெரிவித்தது.
இதனிடையே, சபாவின் உள்பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு துறை முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது. அங்கு வெப்பநிலை 22 செல்சியஸ் முதல் 33 செல்சியஸ் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சராவாக்கில், மிரி மாவட்டத்தில் உள்ள பெகுனு இடைநிலைப்பள்ளி நிவாரண மையத்தில் தங்கியுள்ளோரின் எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் 53 குடும்பங்களைச் சேர்ந்த 166 பேராக உயர்ந்துள்ளது. நேற்று மாலை 4 மணியளவில் அங்கு 18 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர் மட்டுமே இருந்தனர் என சராவாக் பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது.
ஜொகூரில், இன்று காலை 8 மணி நிலவரப்படி செகாமாட் பகுதியில் உள்ள இரண்டு நிவாரண மையங்களில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் தொடர்ந்து தங்கி வருகின்றனர்.
ஜொகூர் பேரிடர் மேலாண்மை குழுத் தலைவர் டத்தோக் அஸ்மான் ஷா அப்துர் ரஹ்மான் கூறுகையில், 11 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் பாலாய் ராயா கம்பூங் பாத்து பாடாக் காவல் நிலையத்திலும், நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் தேவான் செர்பகுனா கம்பூங் தண்டோங் மையத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று ஜொகூர் மாநில பேரிடர் மேலாண்மை குழுத் தலைவர் டத்தோக் அஸ்மான் ஷா அப்துல் ரஹ்மான் கூறினார்.
மேலும், செகாமாட் பகுதியில் உள்ள இரண்டு நதிகள் தற்போது எச்சரிக்கை நிலையை எட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார். புலோ கசாப்பில் உள்ள சுங்கை மூவார் நீர்மட்டம் 8.41 மீட்டராகவும், ஜெட்டியில் உள்ள சுங்கை தெக்காம் 3.76 மீட்டராகவும் பதிவாகியுள்ளது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
January 6, 2026, 10:22 pm
பெர்சத்துவில் இருந்து சைபுடின் அப்துல்லாஹ் நீக்கப்பட்டார்
January 6, 2026, 10:17 pm
துன் டாக்டர் மகாதீரின் இடுப்பு எலும்பு முறிந்தது: சிகிச்சை பல வாரங்கள் நீடிக்கும்
January 6, 2026, 10:14 pm
மடானி அரசாங்கத்தை தாங்கி பிடிக்கும் அம்னோவின் முடிவு முதிர்ந்த அரசியலாகும்: சைபுடின்
January 6, 2026, 5:52 pm
வெள்ளி ரத ஊர்வலத்திற்கான முன்னேற்பாடுகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
January 6, 2026, 1:48 pm
புக்கிட் அமான் JSPT இயக்குநர் உட்பட காவல் துறை மூத்த அதிகாரிகள் பணியிட மாற்றம்
January 6, 2026, 1:37 pm
இளைஞர் பிரிவின் அழுத்தம் இருந்தபோதிலும், அம்னோ ஒற்றுமை அரசாங்கத்தின் கூரையை உடைக்காது: ஜாஹித்
January 6, 2026, 1:02 pm
நான்கு மாநிலங்களில் வெள்ளப் பேரிடர்: 13 நிவாரண முகாம்களில் 1,419 பேர் தங்கியுள்ளனர்
January 6, 2026, 12:56 pm
