செய்திகள் மலேசியா
அன்றாட தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை எட்டிப் பிடிக்கக்கூடும்: நூர் ஹிஷாம் எச்சரிக்கை
கோலாலம்பூர்:
மலேசியாவில் அன்றாடம் பதிவாகும் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை எட்டிப் பிடிக்கக்கூடும் என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாஹ் கூறியுள்ளார்.
SOPகளை கடைபிடிக்காவிட்டால் இத்தகைய பாதிப்புகளைத் தவிர்க்க இயலாது என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
முழுமையான MCO அமலாக்கத்திற்கு முன்பு பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து அதிகரித்திருப்பது தம்மை ஆச்சரியப்படுத்தி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"பெருமளவிலான நகர்வுகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இத்தனைக்கும் மாவட்டங்கள், மாநிலங்கள் இடையேயான பயணத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு தொற்றுப் பரவலைக் கொண்டு செல்வதால் தொற்றுச் சங்கிலியை உடைக்கும் நமது முயற்சி வீணாகிவிடும்," என்று டாக்டர் நூர் ஹிஷாம் கவலையுடன் சுட்டிக் காட்டியுள்ளார்.
"தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றால் நாட்டின் சுகாதாரக்கட்டமைப்பு முடங்கிவிடக்கூடும். அவ்வாறு முடங்கிப் போனால் உங்களுக்கும் உங்களது குடும்பத்தாருக்கும் சிறந்த சிகிச்சை கிடைக்காமல் போகலாம்.
"துரதிர்ஷ்டவசமாக நீங்கள் ஆபத்தான நிலையில் இருந்தாலும் மருத்துவமனையில் உங்களை அனுமதிக்க படுக்கை வசதி இல்லாமல் போகக்கூடும்," என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் கூறியுள்ளார்.
கொரோனாவின் உச்சபட்ச தாக்கத்தை எதிர்கொள்ள மலேசியர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அண்மையில் அவர் எச்சரித்திருந்தார். இந்நிலையில் அன்றாட தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை எட்டிப் பிடிக்கக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:12 pm
ஜொகூர் மிருகக்காட்சி சாலை அருகே போலிசார் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
October 8, 2026, 11:11 pm
ஆலய சிலை உடைப்பு; போலிஸ் உடனடி விசாரணை நடத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 8, 2026, 11:09 pm
சிரம்பான் நகரில் தீபாவளி சந்தை; நமது பாரம்பரிய அடையாளத்தை விட்டுக் கொடுக்க முடியாது: டத்தோ மோகன்
October 8, 2026, 9:01 pm
புகைமூட்டம்: நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் மூடப்படும்
October 8, 2026, 4:08 pm
காற்று மாசுபாடு குறியீடு 150 முதல் 180 வரை இருந்தால் பள்ளிகளை மூட மாமன்னர் உத்தரவு
October 8, 2026, 4:07 pm
கேஎல்ஐஏ சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்களை சட்டத்துறை தலைவர் அலுவலகம் போலிசாரிடம் திருப்பி அளித்தது
October 8, 2026, 4:06 pm
