நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிறுபான்மை இனத்தவரும் சிங்கப்பூர் பிரதமராக முடியும்: அமைச்சர் சண்முகம்

சிங்கப்பூர்:

சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரால் சிங்கப்பூரின் பிரதமராகப் பொறுப்பேற்க இயலும் என்று அந்நாட்டின் சட்டம், உள்துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

ஓர் இந்தியரோ, மலாய் இனத்தைச் சேர்ந்தவரோ சிங்கப்பூரின் பிரதமராக இயலாது என்று கூறப்படுவது சரியல்ல என்றும் அண்மையில் பிபிசி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"தங்களின் இனத்தில் இருந்து ஒருவர் நாட்டின் பிரதமராக வேண்டும் என்றுதான் பெரும்பாலானோர் விரும்புவார்கள். சிங்கப்பூரில் உள்ள இந்தியர்கள், சீனர்கள், மலாய்க்காரர்கள் உள்ளிட்டோர் இவ்வாறு விரும்புகிறார்கள். இது கருத்தாய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

"எனினும் இதுபோன்ற கருத்தாய்வின் மூலம் இந்தியரோ, மலாய்க்காரரோ இவ்விஷயத்தில் 20% பின்தங்கியிருக்கக்கூடும்,"  என்று உள்துறை அமைச்சர் சண்முகம் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

இவ்வாறான இடைவெளி நிலவுகின்ற போதிலும், அது ஒன்றும் கடந்து செல்ல முடியாத ஒன்றல்ல என்றும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெறும் பட்சத்தில் இந்தியரோ, மலாய்க்காரரோ பிரதமராவதற்கான ஆதரவைப் பெற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கும் முன்பு அனைவரையும் வழிநடத்திச் செல்லும் தகுதி உடையவர் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெறுவது அவசியம் என்றார் அவர்.

எனவே இந்த அடிப்படையில் சிறுபான்மை இனத்தவர்களும் சிங்கப்பூரின் பிரதமராக முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset