நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காணாமல்போன இந்தோனேசியக் கண்காணிப்பு விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு 

ஜகார்தா:

காணாமல்போன கண்காணிப்பு விமானத்தின் சிதைவுகளை இந்தோனேசிய அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

எனினும் அதில் பயணம் செய்த 11 பேரை அதிகாரிகள் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

மீன்பண்ணைகளைக் கண்காணிக்கும் அந்த விமானம் சுலாவெசித் (Sulawesi) தீவில் உள்ள ஒரு மலைப்பகுதியில் நேற்று காணாமல்போனது.

எட்டுச் சிப்பந்திகளும் மூன்று அரசாங்க ஊழியர்களும் அதில் இருந்தனர்.

சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து காணாமல்போன பயணிகளைத் தேட 1,200 அதிகாரிகள் முழுமூச்சாக செயல்பட்டு வருகின்றனர்.

மோசமான வானிலையும் பெரிய நிலப்பரப்பும் தேடல் பணிகளைச் சிக்கலாக்கி இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

விமானம், யோக்யக்கர்த்தா (Yogyakarta) நகரிலிருந்து மக்காசார் (Makassar) நகருக்குச் சென்றுகொண்டிருந்தது.

புலு - சரா - உங் (Bulu-sara-ung) மலை அருகே விமானம் விழுந்திருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

மலையில் சிதைவுகளையும் ஆங்காங்கே தீ எறிவதையும் பார்த்ததாக மலையேறிகள் கூறினர்.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset