நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பெக்கான்பாருவில் ரோஹிங்கியா மக்கள் போராட்டம்: உதவித் தொகை அதிகரிக்க கோரிக்கை

பெக்கன்பாரு:

இந்தோனேசியாவின் ரியாவ் பெக்கன்பாருவில் வாழும் சுமார் 100 வெளிநாட்டு அகதிகள், உயரும் வாழ்வாதாரச் செலவுகளை காரணமாகக் கொண்டு, சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) அலுவலகம் முன்பு இன்று திங்கள்கிழமை அமைதிப் போராட்டம் நடத்தினர்.

அவர்கள் தினசரி அடிப்படை தேவைகளுக்கான உதவியை அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் போதுமான நிதி உதவி, அவசர மருத்துவ சேவை, குழந்தைகளுக்கான கல்வி, சிறந்த தங்குமிடம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் போராட்டம் அமைதியாக நடைபெற்றது.

2020 முதல் பெகன்பாருவில் வசித்து வரும் நூரமின் கூறுகையில், 2023 முதல் ‘IOM’ வழங்கும் உதவி படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தற்போது தனிநபருக்கு 1,050,000 ரூபியா (சுமார் RM252), தம்பதியருக்கு 1,700,000 ரூபியா (RM408), ஒரு குழந்தையுடன் உள்ள குடும்பத்திற்கு 2,300,000 ரூபியா (RM552) மட்டுமே வழங்கப்படுவதாகவும், இந்த தொகை வீட்டு வாடகை, மருத்துவ செலவுகள் உள்ளிட்ட தேவைகளுக்கு போதுமானதல்ல என்றும் கூறினார்.

“மரியாதைக்குரிய வாழ்க்கை வேண்டி இங்கு உயிர்ப் பிழைத்து வந்துள்ளோம். தற்போதைய உதவி எங்கள் வாழ்வாதரத்துக்கு போதாது. அதிகாரிகள் கவனம் செலுத்தி ஆதரவை மீண்டும் அதிகரிக்க வேண்டும்,” என்றார்.

மேலும், பிற நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் ஒப்பிடும்போது ரோஹிங்கியா மக்களுக்கு வேறுபட்ட அணுகுமுறை இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்த போராட்டம், உயரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் மரியாதையான, போதுமான வாழ்க்கையை கோரும் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியது.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset