நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மாட்ரிட் அருகே அதிவேக ரயில்கள் மோதல்: 21 பேர் பலி

மாட்ரிட்:

ஸ்பெயினின் தெற்கு பகுதியில் அதிவேக ரயில்கள் மோதிக் கவிழ்ந்ததில் குறைந்தது 21 பேர் உயிரிழந்தனர். சமீப ஆண்டுகளில் நடந்த மிக மோசமான ரயில் விபத்துகளில் இதுவும் ஒன்றாகும்.

நேற்று நிகழ்ந்த இந்த விபத்தில், மோதலுக்குப் பிறகு ஒரு ரயில் தடம் புரண்டு சரிவில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஓஸ்கார் புவென்ட் கூறினார்.

இந்த பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றும் அவர் எச்சரித்தார். “நேரான பாதையில் ரயில் தடம் புரள்வது மிகவும் விசித்திரம். அந்த பாதை கடந்த மே மாதம் புதிதாக மாற்றப்பட்டது,” என்றார்.

மாட்ரிடிலிருந்து சுமார் 360 கிலோமீட்டர் தெற்கில் உள்ள கோர்டோபா அடமுஸ் அருகே விபத்து நிகழ்ந்தது. காயமடைந்தவர்கள் அடமுஸ் நகரின் முதலுதவி பெற்று, பின்னர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.

அண்டலூசியா சுகாதாரத் தலைவர் அன்டோனியோ சான்ஸ், 18 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். தேசிய தொலைக்காட்சி டெலிவிஷன் எஸ்பானோலா, மாட்ரிட்-ஹுல்வா செல்லும் ரயில் ஓட்டுநர் உயிரிழந்தவர்களில் ஒருவர் என்றும், சுமார் 100 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 25 பேர் தீவிர காயமடைந்துள்ளதாகவும் செய்தி வெளியிட்டது.

- கிருத்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset