நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஒவைஸி கட்சியின் 4 எம்எல்ஏக்கள் லாலு கட்சியில் இணைந்தனர்

பாட்னா : 

பிகார் மாநிலத்தில், அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் இ இத்ஹதுல் முஸ்லிம் கட்சியின் (ஏஐஎம்ஐஎம்) 4 எம்எல்ஏக்கள் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் இணைந்தனர்.

இதன் மூலம் மாநில சட்டப்பேரவையின் 243 உறுப்பினர்களில், 80 உறுப்பினர்களைக் கொண்ட தனிப்பெரும் கட்சியாக ஆர்ஜேடி மாறியுள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி பிகாரில் ஆட்சிப்புரிந்து வருகிறது.

ஆர்ஜேடி கட்சியின் தலைவராக உள்ள தேஜஸ்வி யாதவ், மாநில சட்டப் பேரவையின் எதிர்கட்சி தலைவராக உள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு நடைப்பெற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது.

ஏஐஎம்ஐஎம் கட்சியின் 5 உறுப்பினர்களில் 4 பேர் தங்களை தனிப்பிரிவு என அறிவித்துக்கொண்டு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் இணைந்தனர்.

இதற்கான அறிவிப்பை பேரவைத் தலைவர் விஜய் குமார் சின்ஹாவிடம் வழங்கினர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset