
செய்திகள் மலேசியா
ஐந்து லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாடு திரும்பிவிட்டனர்: டத்தோஸ்ரீ எம்.சரவணன் தகவல்
கோலாலம்பூர்:
நாடு முழுவதும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் தேவை அதிகரித்து வருவதாக, மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தேதியில் பல்வேறு துறைகளில் நிலவும் இந்தப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கு, குறைந்தபட்சம் 5 லட்சம் தொழிலாளர்கள் தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தற்போது தோட்டத்துறையில்தான் அதிகமான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தேவைப்படுவதாக, செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த ஆண்டு தொடக்கத்தில், நாட்டில் 17 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள், பல்வேறு துறைகளில் வேலை செய்து வந்ததாக குறிப்பிட்ட டத்தோஸ்ரீ எம். சரவணன், அவர்களில் சுமார் ஐந்து லட்சம் பேர் தங்கள் தாய் நாடுகளுக்கு திரும்பிச் சென்றுவிட்டனர் என்றும், இதன் காரணமாக வெளிநாட்டுத் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 12 லட்சமாக குறைந்துவிட்டது என்றும் விளக்கமளித்தார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களை தருவிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பல்வேறு துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது நன்கு புலப்படுகிறது என்றார் டத்தோஸ்ரீ எம். சரவணன்.
தோட்டத்துறையில் அதிகமான தொழிலாளர்கள் தேவைப்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர், பல்வேறு துறைகளில் பணியாற்ற குறைந்தபட்சம் 5 லட்சம் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர், என்று மேலும் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm