செய்திகள் மலேசியா
தடுப்பூசி நடவடிக்கைகளில் எந்தவித மாற்றமும் இல்லை: அரசு அறிவிப்பு
கோலாலம்பூர்:
நாடு தழுவிய அளவில் முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி எவ்வாறு நடைபெறும் எனும் கேள்வி எழுந்துள்ளது.
இந் நிலையில் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் எந்தவித மாற்றமும் இன்றி நீடிக்கும் என மலேசிய அரசு தெரிவித்துள்ளது. தடுப்பூசி திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என தடுப்பூசி செயல் திட்டக் குழு கூறியுள்ளது.
இது தொடர்பாக அக்குழுவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் தடுப்பூசிக்காக முன்பதிவு செய்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தடுப்பூசி செலுத்தப்படும் என குறிப்பிட்டுள்ள அக்குழு, அனைத்துத் தடுப்பூசி மையங்களும் வழக்கம்போல் செயல்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான முன்பதிவு செய்தவர்கள் mysajahatrra வில் வரக்கூடிய விவரங்களைக் கவனிக்குமாறு தடுப்பூசி மையங்களில் அத் தகவல்களைக் காட்டுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 4:40 pm
தியாகம், மனவுறுதி, அர்ப்பணிப்புடன் தேவையுள்ளோருக்கு உதவுவதே குர்பான்: பிரதமர் அன்வார்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
