நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

புல்டோசர் மூலம் வீடுகள் இடித்ததற்கும் வன்முறைக்கும் சம்பந்தமில்லை: உ.பி. அரசு புது விளக்கம்

புது டெல்லி:

உத்தர பிரதேசத்தில் சட்ட விரோத கட்டடங்கள் இடிக்கப்படுவதற்கும், வன்முறை சம்பவங்களுக்கும் தொடர்பில்லை என்று உச்சநீதிமன்றத்தில் அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

நபிகள் நாயகத்துக்கு எதிராக பாஜகவை சேர்ந்த நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததைக் கண்டித்து உத்தர பிரதேசத்தின் பல பகுதிகளில் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன.

கான்பூர், பிரயாக்ராஜ் ஆகிய நகரங்களில் இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களின் வீடுகளைக் குறிவைத்து அரசு இடிப்பதாகக் கூறி ஜாமியத் உலமாஇல்ஹிந்த் அமைப்பினர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

கான்பூரில் சட்ட விரோதமாக கட்டடங்கள் கட்டப்படுவதை கட்டுமான நிறுவனத்தினர் ஒப்புக் கொண்டனர். மேலும், சட்ட ரீதியிலான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் நீதிமன்றத்தை அணுகவில்லை.

பிரயாக்ராஜ் நகரில் ஒரு குடியிருப்புக் கட்டடம் அனுமதியின்றி அரசியல் கட்சி அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து, அந்த அலுவலத்துக்கு கடந்த மே 10ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸுக்கு கட்டட உரிமையாளர் பதிலளிக்கத் தவறியதால் கடந்த 10ஆம் தேதி இடிப்பதற்கு உள்ளாட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.

சட்ட விரோத கட்டடங்களை அகற்றுவதற்கு உள்ளாட்சி வளர்ச்சி ஆணையம் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆனால், ஒருதலைப்பட்சமான ஊடகச் செய்திகளில், அந்த நடவடிக்கைகளுக்கு உள்நோக்கம் கற்பிக்க முயற்சிகள் நடக்கின்றன என்று அந்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset