நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கொழுந்துவிட்டு எரியும் மணிப்பூர்: பாஜக கூட்டணியில் இருந்து என்பிபி விலகல்

புது டெல்லி:

பாஜக ஆட்சியில் உள்ள மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கிடையோன மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால் அந்தமாநிலத்தில் மீண்டும் வன்முறை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், எம்எல்ஏக்களின் வீடுகளை பொது மக்கள் சூறையாடி வருவதால், பாஜக கூட்டணி அரசில் இருந்து தேசிய மக்கள் கட்சி (என்பிபி) விலகி உள்ளது.

2023, மே மாதம் முதல் மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி, குகி சமுதாயங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்து 237 பேர் உயிரிழந்தனர்.

மணிப்பூரில்சில பகுதிகளில் அமைதி திரும்பி வந்தது. இந்நிலையில் கடந்த 11-ஆம் தேதி ஜிரிபாம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் குகி சமுதாயத்தை சேர்ந்த 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடியாக ஜிரிபாம் மாவட்டத்தில் குகி தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மைதேயி சமூகத்தை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர்.

சிறார் உள்பட 6 பேரின் உடல்கள் ஆங்காங்கே துண்டிக்கப்பட்டு வீசப்பட்டன. இதைத் தொடர்ந்து மணிப்பூர் மாநிலம் முழுவதும் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது.

மணிப்பூரில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பி ஆலோசனை நடத்தினார்.

மணிப்பூரில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த பாஜக தவறிவிட்டதாக குற்றம் சாட்டி என்பிபி கட்சி பாஜக கூட்டணி அரசில் இருந்து நேற்று என்பிபி கட்சியின் 7 எம்எல்ஏக்கள் பதவி விலகினர்.

இதனால் பாஜக அரசுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றாலும் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset