நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மெட்டாவுக்கு இந்தியா ரூ.213.14 கோடி அபராதம்

புது டெல்லி: 

வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு இந்தியா ரூ.213.14 கோடி அபராதம் விதித்துள்ளது.

2021ம் ஆண்டில் புதிய வாட்ஸ்ஆப் தனியுரிமை கொள்கையை அமல்படுத்தியதன் மூலம் நியாயமற்ற வணிக நடைமுறைகளை பின்பற்றியதாக மெட்டா நிறுவனத்துக்கு இந்திய போட்டி ஆணையம் CCI இந்த அபராதத்தை விதித்துள்ளது.

மேலும், போட்டி எதிர்ப்பு நடைமுறைகளை உடனடியாக நிறுத்தவும் மெட்டா நிறுவனத்துக்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இணையவழி மூலம் தகவல் பரிமாற்றம் செய்யும் செயலி மற்றும் இணையவழி காட்சி விளம்பரம் ஆகிய இரு சந்தைகளில் மெட்டா குழு இந்தியாவில் ஆதிக்கம் செலுத்துவது கண்டறியப்பட்டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset