
செய்திகள் இந்தியா
மோடி விமானத்தில் கோளாறு: 2 மணி நேரம் காக்க வைக்கப்பட்ட ராகுல்
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையை முடித்து கொண்டு தில்லிக்கு திரும்ப இருந்த பிரதமர் மோடியின் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் விமான நிலையத்திலேயே சுமார் இரண்டு மணி நேரம் அவர் காத்திருந்தார்.
அதேநேரத்தில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் கோடாவில் இருந்து பிரசாரத்துக்கு புறப்பட தயாராக இருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவரும் 2 மணி நேரம் காத்திருந்தார்.
மோடியின் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தியோகர் விமான நிலையத்திலேயே 2 மணி நேரம் பிரதமர் மோடி இருந்ததால், பாதுகாப்பு காரணங்களுக்கு விமானங்கள் பரப்பதற்கு தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
இதனால் கோட மாவட்டத்தில் பிரசாரத்துக்குச் சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் புறப்பட அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் காத்திருக்க நேரிட்டது.
இது தொடர்பாக ஜார்க்கண்ட் அமைச்சர் தீபிகா பாண்டே சிங் கூறுகையில், ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் சுமார் 2 மணிநேரம் புறப்பட அனுமதிக்கப்படவில்லை.
இது அவரது உயிருக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது என குற்றஞ்சாட்டினார்.
ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் புறப்பட அனுமதி மறுக்கப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் வெள்ளிக்கிழமை புகார் அளித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm
காஷ்மீர் தாக்குதல்: விமான டிக்கெட்டுகளின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது
April 24, 2025, 2:27 pm