
செய்திகள் இந்தியா
புல்டோசரால் இடித்து வீட்டை இழந்தவர்கள் இழப்பீடு கேட்க முடிவு
பிரயாக்ராஜ்:
புல்டோசர் நடவடிக்கை சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால், உத்தர பிரதேச மாநில அரசால் கட்டடங்கள் இடிக்கப்பட்ட நபர்கள் இழப்பீடு கோரி நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர்.
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களாக கூறி முஸ்லிம்களின் கட்டடங்களை புல்டோசர் கொண்டு இடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தன.
இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் அதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
பிரயாக்ராஜில் 2022இல் புல்டோசர் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஜாவேத் முஹம்மது கூறுகையில், எனது இரு மாடிக் கட்டடம் இடிக்கப்பட்டபோது என் மனைவியும் மகளும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.
எனக்கு நோட்டீஸ் ஏதும் வழங்கப்படாமல் எனது வீடு இடித்து தள்ளப்பட்டது. எனது வீடு இடிக்கப்பட்ட பிறகு எங்கள் குடும்பம் மிகுந்த சிரமங்களை சந்தித்தது. பெரும் சிரமத்துக்கு இடையே நாங்கள் ஒரு வாடகை வீட்டுக்கு மாறினோம் என்றார்.
இதேபோல் உத்தர பிரதேசத்தின் கௌஸ்கஞ்ச் கிராமத்தைச் சேர்ந்த ரசிதான், நஃபீஸா, சாய்ரா கடூன் ஆகியோரின் வீடுகள் அம்மாநில அரசால் இடிக்கப்பட்டன. இழப்பீடு கோரி நீதிமன்றத்தை அணுகப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 7:59 pm
மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி: நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm