செய்திகள் இந்தியா
வங்கிக் கணக்குகளை வாடகைக்கு விட்டு மோசடி: குஜராத்தில் 4 பேர் கைது
சூரத்:
சட்ட விரோத பணப் பரிவர்த்தனைக்கு 623 வங்கிக் கணக்குகளை வாடகைக்கு வழங்கி மோசடி செய்ததாக நான்கு பேரை குஜராத் போலீஸார் கைது செய்தனர்.
பல்வேறு இணையவழி குற்றங்கள் மூலம் திருடப்பட்ட ரூ.111 கோடியை இந்த கணக்குகள் மூலம் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சூரத் மாவட்டத்தில் உள்ள மோட்டா வராச்சா பகுதியில் போலீஸார் சோதனை நடத்தியபோது, இணையவழி குற்றங்கள் மூலம் பெறப்பட்ட பணத்தை ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு மாற்றிக்கொண்டிருந்த மூவர் கையும் களவுமாகப் பிடிபட்டனர்.
அவர்கள் துபை மற்றும் சீனாவை தளமாகக் கொண்டு செயல்படும் இணையவழி மோசடி கும்பல்களுக்கு 623 வங்கிக் கணக்குகளை வழங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.
இந்தகணக்குகள்வழியே பல்வேறு இணையவழி குற்றங்கள் மூலம் திருடப்பட்ட ரூ.111 கோடி பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த 623 கணக்குகள் மீது 866 இணையவழி மோசடி புகார்களும், 200 எஃப்ஐஆர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று போலீஸார் தெரிவித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 15, 2024, 3:31 pm
பறக்கும் விமானத்தில் வெடிகுண்டு உள்ளதாக பயணி எச்சரிக்கை
November 15, 2024, 11:01 am
டொமினிகா நாட்டின் உயரிய விருதைப் பெறுகிறார் பிரதமர் மோடி
November 15, 2024, 9:06 am
காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு ரூ.50 கோடி லஞ்சம்: பாஜக மீது கார்கே குற்றச்சாட்டு
November 13, 2024, 4:21 pm
மும்பையில் ஆப்கான் துணைத் தூதர் நியமனம்
November 13, 2024, 12:31 pm
பிரதமர் நரேந்திர மோடி அரச முறை பயணமாக 16-ஆம் தேதி நைஜீரியா செல்கின்றார்
November 12, 2024, 10:26 am
ஏர் இந்தியாவுடன் இணைவதால் கடைசியாக பறக்கும் விஸ்தாரா
November 9, 2024, 9:48 pm
ரூ. 500, ரூ.1000 திரும்பப் பெற்று 8-ம் ஆண்டு; ஏகபோகத்துக்கு வழிவகுத்தது: ராகுல்
November 9, 2024, 4:37 pm