
செய்திகள் மலேசியா
எல்ஆர்டி ரயில் விபத்து போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது: பிரதமர் திட்டவட்டம்
புத்ராஜெயா:
அண்மையில் நிகழ்ந்த எல்.ஆர்.டி. ரயில் விபத்து போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாத வண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங்கிடம் தாம் கூறியிருப்பதாக பிரதமர் மொஹைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
எல்ஆர்டி ரயில்கள் இயக்கத்தை மீண்டும் நிலைநிறுத்துமாறு தாம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்ய அமைச்சரே ரயிலில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று தாம் கேட்டுக்கொண்டதாகவும் பிரதமர் கூறினார்.
கடந்த திங்கட்கிழமை எல்.ஆர்.டி. ரயில்கள் மோதிக்கொண்ட விபந்தது நிகழ்ந்தது. அதற்கான காரணத்தைக் கண்டறிய முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளடது.
"கடந்த 20 ஆண்டுகளில் எல்ஆர்.டி. ரயில்கள் மோதிக் கொண்டதாக நாம் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் தற்போது அவ்வாறு நிகழ்ந்துள்ளது. இது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
"அதனால் இதுகுறித்து விசாரிக்க விரும்புகிறோம். இன்னும் சிறிது காலத்தில் என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியவரும்," என்றார் பிரதமர் மொஹைதீன் யாசின்.
ரயில் விபத்தில் காயமடைந்தவர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் கோலாலம்பூர் மருத்துவமனையில் அவர் சந்தித்துப் பேசினார்.
"ரயில்கள் மோதிக்கொண்ட விவகாரம் ஏற்கெனவே சிறப்பு பணிக்குழுவிடம் உள்ளது. விசாரணைக்காக அமைக்கப்பட்ட அந்தக் குழு விபத்து எவ்வாறு நிகழ்ந்திருக்கும் என்பது குறித்து விசாரிக்கும்.
"மேற்கொண்டு எந்த ஆபத்தும் இல்லை. அனைத்தும் சரியாகி விட்டது என்ற பட்சத்தில் அடுத்த சில தினங்களில் எல்.ஆர்.டி. சேவைகள் வழக்கமான செயல்பாட்டுக்கு வரும் என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும்," என்றும் பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதீன் யாசின் கூறினார்.
விபத்தில் காயமடைந்தவர்களில் 3 பேர் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm