நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பிரபல பாடகியும் நடிகையுமான அடிபாஹ் நூர் புற்றுநோய்க்கு பலி

கோலாலம்பூர்:

நாட்டின் பிரபல பாடகியும் நடிகையுமான அடிபாஹ் நூர் Adibah Noor புற்றுநோய் பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 51.

அவரது சக கலைஞர்கள் அவரது மறைவை சமூக ஊடகங்களில் உறுதிபடுத்தினர்.

கடந்த 1995ஆம் ஆண்டு முதல் நடிகையாகவும், பாடகியாகவும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த அடிபாஹ் நூர், எண்ணற்ற விளம்பரங்களுக்குப் பின்னணிக் குரலும் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், கர்ப்பப்பை தொடர்புடைய புற்றுநோயால் அவர் சனிக்கிழமை இரவு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

Sepet, Gubra உட்பட பல்வேறு படங்களில் தமது திறமையை வெளிப்படுத்தி உள்ள அடிபாஹ் நூர் எண்ணற்ற மேடை நாடகங்கள், இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று ரசிகர்களை மகிழ்வித்தார்.

அடிபாஹ் நூர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல் பரப்ப வேண்டாம் என நடிகையும் பாடகியுமான Ani Mayuni சக கலைஞர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தாம் வாழ்வின் கடைசிக்கட்டத்தில் வலியும் வேதனையும் அனுபவித்ததை வெளிப்படுத்த வேண்டாம் என்று அடிபாஹ் நூர் கேட்டுக்கொண்டதாக Ani Mayuni தெரிவித்தார்.

Gegar Vaganza பாடல் திறன் போட்டியில் பங்கேற்ற பிறகு அடிபாஹ் நூரின் உடல்நலம் பாதிக்கப்பட்டு பின்னர் மோசமடைந்தது.

"அண்மையில் நோன்புப் பெருநாளை ஒட்டி நடைபெற்ற படப்பிடிப்பின்போது அவருக்கு இடைவிடாமல் காய்ச்சல் வந்துபோனது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

"கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பார் என்று நினைத்தோம். எனினும், பின்னர் தனிப்பட்ட வகையில் விசாரித்த போதுதான் தமக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகவும், அதற்காக அண்மையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்," என்று Ani Mayuni கூறியுள்ளார்.

மிகவும் அன்பானவர், கனிவானவர் என்று அனைவராலும் குறிப்பிடப்படும் அடிபாஹ் நூர், பாடல்கள் எழுதும் திறனும் கொண்டவர்.

கடந்த 2005ஆம் ஆண்டு இவர் தாமே எழுதி பாடிய Terlalu Istimewa என்ற பாடல் ரசிகர்களின் மனதுக்கு மிக நெருக்கமான பாடலாக இன்றளவு உள்ளது.

சிறந்த பாடகி, சிறந்த பாடல், சிறந்த குரல் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார் அடிபாஹ். மேலும், Sepet, Mukhsin உள்ளிட்ட படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.

வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர், தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு குரல் கொடுத்தவர், ஆங்கில ஆசிரியை, பெரு நிறுவனங்களின் மொழிபெயர்ப்பாளர், மாநில அரசின் வீடமைப்புத் துறையின் தூதர் என்று பன்முகங்களைக் கொண்டவர் அடிபாஹ் நூர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset