
செய்திகள் மலேசியா
Prasarana -வில் அதிகார துஷ்பிரயோகம்; தாஜுதீன் கைது: ஊழல் தடுப்பு ஆணையம் நடவடிக்கை
கோலாலம்பூர்:
Prasarana நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ தாஜுதீன் அப்துல் ரஹ்மானை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று தடுத்து வைத்தது. அவர் தமது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாசிர் சாலக் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ தாஜுதீன் நேற்று ஊழல் தடுப்பு ஆணையத்தில் வாக்குமூலம் அளிக்கவந்தபோது கைதானார். எனினும் பின்னர் அவர் வாய்மொழி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த ஜனவரி மாதம் prasarana அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு சோதனை நடவடிக்கை தொடர்பில் மேலதிக விசாரணைக்காக அவர் ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு வந்ததாக ஒரு தகவலை மேற்கோள் காட்டி மலேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தாஜுதீன் மீது நேற்றே குற்றம் சாட்டப்பட்டிருக்கும் என்றும் அட்டர்னி ஜெனரலின் உத்தரவுகளுக்காக ஊழல் தடுப்பு ஆணையம் காத்திருப்பதாகவும் மற்றொரு ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்கள் உடனடியாகத் தெரியவரவில்லை. எனினும் Prasaranaவின் நடவடிக்கைகளிலும் அதன் வர்த்தக உடன்பாடுகளிலும் தாஜுதீன் தலையிட்டதாகக் கூறப்படுகிறது.
அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான தமது விசாரணை முடிவுக்கு வந்திருப்பதாக ஊழல் தடுப்பு ஆணையம் மே 5ஆம் தேதி அறிவித்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm