செய்திகள் மலேசியா
நெகிரியில் முன்பதிவு செய்திருந்த 6,200 பேர் உரிய நேரத்தில் ஊசி போட்டுக் கொள்ளவில்லை
சிரம்பன்:
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்திருந்த 6,200 பேர் உரிய நேரத்தில் ஊசி போட்டுக்கொள்ள வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஏப்ரல் முதல் இன்றைய தேதி வரையிலான எண்ணிக்கையாகும்.
ஊசி போட்டுக் கொள்வதற்கான நேரத்தையும் தேதியையும் mysejahpera செயலியில் பார்க்கத் தவறிவிட்டதாக பலர் காரணம் தெரிவித்துள்ளனர் என்று மாநில சுற்றுச்சூழல் கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் குழுவின் தலைவரான வீரப்பன் கூறினார்.
"மேலும் சிலர் தடுப்பூசி மையம் தங்கள் வீட்டிலிருந்து தூரத்தில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். தங்களை தடுப்பூசி மையத்திற்கு அழைத்துச் செல்ல யாரும் இல்லை என மூத்த குடிமக்கள் தெரிவித்தனர்.
"மேலும் சில தனிநபர்கள் தங்களுக்கு தொற்று உறுதியாகி இருப்பதாகவும், சிலர் தொற்று பாதித்தவர்களுடன் தாங்கள் நெருக்கமாக இருந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். தடுப்பூசிக்கான நேர முன்பதிவு விஷயத்தில் அனைவரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்," என்று வீரப்பன் கேட்டுக் கொண்டார்.
நெகிரி செம்பிலான் உள்ள 5 தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி மையங்களாக செயல்படும் என்றும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
October 10, 2026, 4:24 pm
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்வாரா?
October 10, 2026, 4:23 pm
புகைமூட்டம்: எந்தப் பகுதியிலும் ஆரோக்கியமான காற்று மாசுபாடு குறியீட்டு அளவு பதிவாகவில்லை
October 10, 2026, 4:05 pm
லயோலா கல்லூரியில் படித்ததில் பெருமை கொள்கிறேன்: சுப்ரீம் ஸ்டார் ஆர்.சரத்குமார் பெருமிதம்
October 10, 2026, 1:35 pm
யாரும் கண்காணிக்காதபோதும் சரியானதைச் செய்வதே நேர்மை: டத்தோ வீரா ஷாகுல்
October 10, 2026, 10:13 am
