நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிளந்தானில் நிலநடுக்கம் ஏற்படவில்லை: வானிலை ஆய்வு துறை விளக்கம்

கோத்தபாரு:

கிளந்தான் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல என மலேசிய வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு முகமைகள் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் ஒரு இணையதளத்தில் நிலநடுக்கம் குறித்து செய்தி வெளியானதாக அத் துறையின் தலைமை இயக்குநர் பீலான் சைமன் கூறினார்.
கிளந்தான் மாநிலத்தில் உள்ள குவா மூசாங் பகுதியில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வைரலானது.

"மலேசியாவில் எத்தகைய நிலநடுக்கமும் ஏற்படவில்லை. இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் மே 26ஆம் தேதி இரவு 9.38 மணியளவில் ஒரு நிலநடுக்கம் உணரப்பட்டது.

"நிலநடுக்கம் அல்லது சுனாமி குறித்த சரியான தகவல்களுக்கு பொதுமக்கள் www.met.gov.my தளத்தை அணுகலாம்," என்று அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset