நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வரும் சனிக்கிழமை முதல்  ஜூன் 11ஆம் தேதி வரை சரவாக்கில் MCO

கூச்சிங்:

வரும் சனிக்கிழமை முதல்  ஜூன் 11ஆம் தேதி வரை சரவாக் மாநிலத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வரும். இத்தகவலை அம்மாநிலத்தின் துணை முதல்வர் டத்தோ அமர் டக்ளஸ் உகாஹ் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு மன்றம் அம்மாநிலத்தில் பின்பற்றப்பட வேண்டிய SOPகளை வெளியிடும் என்று அவர் கூறினார்.

நாட்டில் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு சீராக அதிகரித்த வண்ணம் உள்ளது. தினந்தோறும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.  

இந்நிலையில் சரவாக்கிலும் தொற்றுப் பரவலை உடனடியாகக் குறைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக துணை முதல்வர் டத்தோ அமர் டக்ளஸ் கூறினார்.

"சில வாரங்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துவது தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக அமையும். SOPக்கள் அனைத்தையும் தேசிய பாதுகாப்பு மன்றம் அறிவிக்கும்.

"அதன் இணையதளத்தில் SOPகள் வெளியிடப்படும். மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவானது தேசிய பாதுகாப்பு மன்றத்தின் ஒப்புதலுடன் இந்த மாநிலம் தழுவிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தி உள்ளது," என்றார் டத்தோ  அமர் டக்ளஸ்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset