நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்கள் தடுப்பூசிகளைத் துரத்திச் செல்ல வேண்டியுள்ளது: அன்வார் விமர்சனம்

கோலாலம்பூர்:

தடுப்பூசிக்காக மக்கள் ஒன்றுமில்லாதவர்களைப் போல் கையேந்தி நிற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

தடுப்பூசிக்கான பதிவு சீராக நடைபெற உரிய ஏற்பாடுகளைச் செய்ய அரசு தவறிவிட்டதாக அவர் சாடியுள்ளார்.

போர்ட்டிக்சன் தொகுதி எம்பியுமான அவர் இன்று டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், மக்கள் தடுப்பூசிகளைத் துரத்திச் செல்ல வேண்டிய நிலைக்கு ஆட்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

"தடுப்பூசிகளின் பின்னால் மக்களை அலைய வைத்திருப்பது இது முதல் முறையல்ல. அதிகமான பதிவுகளை ஏற்கும் வகையில் பதிவுக்கான நடவடிக்கையை மேம்படுத்த வேண்டும். மேலும், அனைவருக்கும் எளிதான நடைமுறையாக அது இருத்தல் வேண்டும். இதையே எத்தனை முறை திரும்பச் சொல்வது?" என்று அன்வார் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதற்கிடையே, அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்கான பெயர் பதிவு இன்று நடைபெற்றது. பதிவு தொடங்கிய சுமார் ஒரு மணி நேரத்துக்குள் அனைத்து ஊசிகளுக்குமான முன்பதிவு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் தங்கள் பெயரைப் பதிவு செய்ய முற்பட்ட ஏராளமானோர் ஏமாற்றமடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset