நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மக்கள் நீதி மையக் கட்சியின் தலைவர் கமல் ஹாசனுடன் டத்தோஸ்ரீ சரவணன் சந்திப்பு 

கோலாலம்பூர்:

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமான  பத்ம பூஷன் டாக்டர் கமல்ஹாசன்  மனித வளத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணனை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

ஜூன் 3, ஆம் தேதி கமல்ஹாசனின் புதிய திரைப்படமான 'விக்ரம்' வெளிவரவிருக்கின்றது. அந்தத் திரைப்படத்தை விளம்பரப்படுத்த அவர் நேற்று கோலாலம்பூருக்கு வருகை தந்துள்ளார்.

NU சென்ட்ரலில் நேற்று நடைபெற்ற இப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இருந்து 10,000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

2018 ஆம் ஆண்டு வெளிவந்த அவரது கடைசிப் படமான ‘விஸ்வரூபம் 2’க்கு பிறகு அவர் நடித்த எந்தப்படமும் திரைக்கு வரவில்லை. 

அவர்  அரசியலில் கவனம் செலுத்துவதற்காக திரைப்பட உலகில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுத்திருந்தார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியை மட்டும் தொகுத்து வழங்கி வந்தார்.

அவரது சந்திப்புக்குப் பின் பேசிய அமைச்சர், "அரசியல் நிலவரங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம். மேலும், கமல்ஹாசனின் எதிர்கால படங்களின் படப்பிடிப்பிற்காக மலேசியாவை பரிசீலிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளேன்” என்று சரவணன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset