
செய்திகள் மலேசியா
தடுப்பூசி போட்டுக்கொள்ள வராத 10 ஆயிரம் பேர்: கெடாவில் இதுதான் நிலைமை
அலோர்ஸ்டார்:
கெடா மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உரிய நேரத்தில் வரவில்லை என தெரியவந்துள்ளது.
மொத்தம் 10,827 தனி நபர்கள் தடுப்பூசிக்காக விண்ணப்பித்திருந்தும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தடுப்பூசி மையத்துக்கு வரவில்லை என மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கெடாவில் இதுவரை 30,100 பேர் தடுப்பூசிக்காக பதிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் mysejahtera செயலி மூலமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
"பதிவு செய்தவர்களில் சுமார் 35 விழுக்காட்டினர் ஊசி போட்டுக்கொள்ள வரவில்லை. எனினும் காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்களுக்கு அந்த ஊசிகள் செலுத்தப்பட்டன. ஊசி போடுவதற்கான விதிமுறைகளைப் பின்பற்றி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது," என்று கெடா மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் மொகமட் ஃபிக்ரி உஜாங் (Dr Mohd Fikri Ujang)தெரிவித்துள்ளார்.
"கவலை மற்றும் ஊசி போட்டுக் கொள்வதற்காக தயார்படுத்திக் கொள்ளாதது, உடல்நல பாதிப்பு, தொற்றுக்காக தனிமைப்படுத்தப்பட்டிருப்பது, வெளியூர் சென்றிருப்பது என்று பல்வேறு காரணங்களை ஊசி போட்டுக் கொள்ளாதவர்கள் முன்வைத்துள்ளனர்.
"மேலும் சிலர் ஊசி போட்டுக் கொள்வதற்கான தேதியை மாற்றும்படி கடைசி நேரத்தில் விண்ணப்பித்துள்ளனர். எனவே, ஊசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் சமூக வலைத்தளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
"மேலும் தடுப்பூசிகளின் முக்கியத்துவம், அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் குறித்தும் விவரிக்கப்படுகிறது," என்று டாக்டர் மொகமட் ஃபிக்ரி உஜாங் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm