
செய்திகள் மலேசியா
டத்தோஸ்ரீ தாஜுதீன் ராஜினாமா செய்ய வேண்டும்; 24 மணி நேரத்திற்குள் 100,000 கையொப்பங்கள்; இணையத்தில் வைரல்
கோலாலம்பூர்:
பொது போக்குவரத்து நிறுவனமான பிரசரணாவின் தலைவர் டத்தோஸ்ரீ தாஜுதீன் அப்துல் ரஹ்மான் பதவி விலக வேண்டும் என்ற ஆன்லைன் கோரிக்கையில் 100,000 க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். மனு உருவாக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் மலேசியர்களிடையே இது ட்ரெண்டாகி இருக்கிறது.
Change.org என்ற இணையதளத்தில் ஆன்லைன் மனு “#LetakJawatanTajuddin” என்ற தலைப்பில் இது உள்ளது. இதற்கு ஆங்கிலத்தில் “ஸ்டெப் டவுன், தாஜுதீன்” என்று பொருள்படும்.
நேற்று இரவு 7 மணியளவில் தொடங்கியதாக இணையத்தில் வெளியான இந்த மனுவில், இன்று மாலை 4 மணி வரை அல்லது சுமார் 21 மணி நேரத்திற்குள் 100,000 கையொப்பங்களைப் பெற்றுள்ளது. மேலும், மாலை 5 மணி வரை 107,200 க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களைப் பெற்றுள்ளது.
மே 24 ஆம் தேதி இரவு எல்.ஆர்.டி விபத்தினால் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்திருந்த போது டத்தோஸ்ரீ தாஜுத்தீன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். பாதிக்கப்பட்டவர்களை நிர்வகிப்பதில் தாஜுதீனின் தோல்வி, புரிந்துணர்வின்மை மற்றும் பச்சாத்தாபம் இல்லாதது கண்டு மக்கள் வெகுண்டு கையெழுத்திட்டுள்ளனர்.
மோதிக் கொண்ட இரண்டு இலகு ரயில்களைக் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, "இரண்டு கார்கள் முத்தமிட்டது போல் மோதின" என்ற அவரது பதில் பலரை எரிச்சல் அடைய வைத்திருக்கிறது. அந்தப் பதில் ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதன்பிறகு பெரும்பாலோர் அவர் "பிரசரணா தலைவராக பதவியில் இருக்க தகுதியற்றவர்" என்று கூறத் தொடங்கிவிட்டனர்.
இந்தச் சம்பவம் நடந்த இடத்திற்கு மே 25 அன்று அவர் வருகை தந்த பின்னர், பத்திரிகையாளர் சந்திப்பின் போது தாஜுதீன் சீனா செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு நிருபருக்கு எதிராக "இனவெறி கருத்து" கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாய முகமூடியை அணியாமல் முகக் கவசம் மட்டும் அணிந்து பொதுவெளியில் அவர் வந்திருக்கிறார் என்றும் நடமாட்ட இயக்க நடைமுறைகளை தாஜுதீன் மீறியதாகவும் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காவல்துறை மற்றும் சுகாதார அமைச்சகம் அவர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
“எனவே, பசீர் சலக் எம்.பி. தாஜுதீன் அப்துல் ரஹ்மான் உடனடியாக பிரசாரனா தலைவர் பதவியை ராஜினாமா செய்யுமாறு கோருகிறோம். MOF துணை நிறுவனத்தின் மிக உயர்ந்த பதவியை விட்டுவிடுவதில் தாஜுதீன் இன்னும் பிடிவாதமாக இருந்தால் நிதி அமைச்சு அவரை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும்” என்றும் அந்த இணைய மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று, டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி மொஹமத் ஜைனல் அப்துல்லாஹ் கூறுகையில், எல்.ஆர்.டி ரயில் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட பின்னர்பத்திரிகையாளர் சந்திப்பின் போது டத்தோஸ்ரீ தாஜுத்தீன் முகக் கவரி அணியத் தவறியதாகக் காட்டிய சமூக ஊடகங்களில் வைரல் வீடியோவில் காவல்துறை நேற்று விசாரணைகளைத் தொடங்கியுள்ளது என்று தெரிவித்து இருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm