
செய்திகள் மலேசியா
மஇகா தேசியத் தலைவராக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் போட்டியின்றித் தேர்வு
கோலாலம்பூர்:
மஇகா தேசியத் தலைவராக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேர்தல் குழுத் தலைவர் டான்ஸ்ரீ ராஜு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இரண்டாவது முறையாக தேசியத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், தமக்கு ஆதரவு அளித்த கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இம்முறை நடப்பு தேசியத் தலைவராக உள்ள டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மட்டுமே அப் பதவிக்கான தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததை அடுத்து அவரை வெற்றியாளராக அறிவித்தார் டான்ஸ்ரீ ராஜு.
இன்று பிற்பகல் ஒரு மணியுடன் தலைவர் பதவிக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் மஇகாவின் 3,620 கிளைகளின் ஆதரவுடன் விக்னேஸ்வரன் வெற்றி பெற்றுள்ளார். மஇகாவில் மொத்தம் 3,808 கிளைகள் இருப்பதாக அறியப்படுகிறது.
2021 முதல் 2024 வரையிலான தவணைக்காலத்தில் விக்னேஸ்வரன் மஇகா தேசியத் தலைவராக பொறுப்பு வகிப்பார்.
மஇகாவின் பத்தாவது தேசியத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கட்சியின் கிளைத்தலைவர்களுக்கும் இதர உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கு தமது பங்களிப்பை தொடர்ந்து வழங்கப் போவதாகவும் இந்திய சமூகத்தின் மேம்பாட்டுக்கான தமது போராட்டம் நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm