
செய்திகள் மலேசியா
மலேசியாவில் இதுவரை 64,046 குழந்தைகளுக்கு கொவிட்-19 பாதிப்பு: இஸ்மாயில் சப்ரி அதிர்ச்சித் தகவல்
கோலாலம்பூர்:
மலேசியாவில் 12 வயதுக்குட்பட்ட 41,971 குழந்தைகள் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்துள்ளார்.
புள்ளி விவரங்களை வைத்துப் பார்க்கும்போது கொவிட் 19 நோய் தற்போது குழந்தைகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்று அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளில், பிறந்து 18 மாதங்களே ஆன 6,290 குழந்தைகளும் கைக்குழந்தைகளும் அடங்கும் என அவர் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையும் கவலை தரும் வலையில் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இதுவரை பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த குழந்தைகளின் எண்ணிக்கை 64,046 ஆக அதிகரித்துள்ளது என்றார். கடந்தாண்டு முழுவதும் 8,369 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த எண்ணிக்கை தற்போது 8 மடங்காக அதிகரித்துள்ளதை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
"தொடக்கத்தில் வயதில் மூத்தவர்களைதான் கொரோனா அதிகம் தாக்கியது. ஆனால் இப்போது புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது அக்கிருமி ஏற்கெனவே குழந்தைகளையும் பரவலாக தொற்றி வருவது உறுதியாகி உள்ளது.
"தற்போது கிடைத்துள்ள எண்ணிக்கை, விவரங்கள் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. எனவே, பெற்றோர் உட்பட அனைவரும் கவனமாக இருக்கவேண்டும்," என மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm