
செய்திகள் இந்தியா
பொது மக்களின் எதிர்ப்புக்கு பணிந்தது இந்திய அரசு: பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது
புது டெல்லி:
பொது மக்களின் கடும் எதிர்ப்புக்கு பணிந்து பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது ஒன்றிய அரசு.
உலகெங்கும் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் இந்திய அரசு விலை குறைக்காமல் இதுநாள்வரை இருந்து வந்தது. தேர்தல் நேரத்தில் மட்டும் விலை ஏற்றாமல் மட்டும் இந்திய அரசு கண்காணித்தது.
இந்தியாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேறுவழியில்லாமல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.8, டீசல் ரூ.6 என கலால் வரியை இந்திய அரசு குறைத்துள்ளது.
இதனால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50, டீசல் ரூ.7 சந்தை விலையில் குறைந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 60 நாள்களாக பெட்ரோல் ரூ. 110-ஐ தாண்டியும், டீசல் ரூ.100 தாண்டியும் விற்பனையாகியது.
இந்த விலை உயர்வால் பண வீக்கம் அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி எச்சரித்த பின்பும் இந்திய அரசு கலால் வரியை குறைக்கவில்லை.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையாக வலியுறுத்தியும் குறைக்கவில்லை.
இதனால் இந்தியாவின் பண வீக்கம் 15 சதவீதம் வரை உயர்ந்தது.
இந்நிலையில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.8, டீசல் ரூ.6 என கலால் வரியை இந்திய அரசு குறைத்தது.
இதைத் தொடர்ந்து கேரளமும் மாநில வரியை குறைத்தது. பெட்ரோல் மீதான மாநில வரியை லிட்டருக்கு ரூ.2.41, டீசல் ரூ.1.36 என கேரள அரசு சனிக்கிழமை குறைத்தது.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததை வரவேற்ற கேரள நிதியமைச்சர் கே.என். பாலகோபால், "பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதிக்கும் பெரும் வரியில் சற்று குறைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநில அரசும் தனது வரியை பெட்ரோல் மீது ரூ.2.41, டீசல் மீது ரூ.1.36 குறைக்கிறது' என்றார்.
கலால் வரியை இந்திய அரசு முந்தையை காங்கிரஸ் ஆட்சியின் விலைக்கு குறைக்க வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியது.
மேலும், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என்பது மக்களை முட்டாளாக்கும் செயல் என்று அக்கட்சி கூறியுள்ளது.
இதுதொடர்பாக அக் கட்சி செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், "கடந்த 60 நாள்களில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு மத்திய அரசு ரூ.10 உயர்த்தி உள்ளது.
ஆனால், தற்போது ரூ.9.50, ரூ. 7 என குறைத்து மக்களை ஏமாற்றுகிறது. 2014 காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.9.48 ஆக இருந்தது. தற்போது விலை குறைப்புக்கு பின்பும் ரூ. 19.90 ஆக உள்ளது. அப்போது டீசல் மீதான கலால் வரி ரூ.3.56ஆக இருந்தது. தற்போது ரூ.15.80 ஆக உள்ளது' என்றார்.
தொடர்புடைய செய்திகள்
July 3, 2022, 11:22 pm
நுபுர் சர்மாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்: தேடப்படும் நகராக அறிவிப்பு
July 3, 2022, 6:56 pm
நுபுர் சர்மாவுக்கு இந்திய உச்சநீதிமன்றம் அளித்த கடும் கண்டனங்கள்: முழு விவரம்
July 3, 2022, 5:01 pm
இந்தியாவுக்கு 1.75 பில்லியன் டாலர் கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல்
July 1, 2022, 8:19 pm
கேரளத்தில் ஆந்த்ராக்ஸ் பரவல்
July 1, 2022, 8:13 pm
பான் கார்டு-ஆதார் எண் இணைப்புக்கு இன்று முதல் ரூ.1,000 அபராதம்
July 1, 2022, 7:54 pm
இந்திய அரசின் மொத்த கடன் அதிகரிப்பு
July 1, 2022, 12:04 am
ராஜஸ்தான் தையல்காரர் கொலை வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றம்
June 30, 2022, 10:52 pm