
செய்திகள் உலகம்
பாமாயில் ஏற்றுமதி தடையை நீக்கியது இந்தோனேசியா
ஜகார்த்தா:
பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக இந்தோனேசியா அறிவித்துள்ளது. உள்ளூர் விவசாயிகளின் போராட்டத்தை அடுத்து இந்த முடிவை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது.
மே 23ஆம் தேதி முதல் பாமாயில் ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் ஜோகோ விதோதோ அறிவித்துள்ளார்.
இந்தோனேசியாவும், மலேசியாவும் பாமாயில் ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடுகளாகத் திகழ்கின்றன.
உலக பாமாயில் உற்பத்தியில் 85 சதவீதம் இந்த இரு நாடுகளில்தான் உள்ளது. அந்நாடுகளின் பொருளாதாரமும் பெருமளவில் பாமாயிலை நம்பியே உள்ளது.
இதனிடையே ரஷியா-உக்ரைன் போரால் சூரியகாந்தி எண்ணெய் விநியோகம் தடைபட்டது. உலகில் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் ரஷியா, உக்ரைனின் பங்களிப்பு 70 சதவீதமாகும்.
சூரியகாந்தி எண்ணெய் விநியோக பாதிப்பால் பாமாயில் விலை வேகமாக அதிகரித்தது. இந்நிலையில், பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா 3 வாரங்களுக்கு முன்பு தடை விதித்தது.
இதனால், அதன் விலை 200 சதவீதம் அளவுக்கு சர்வதேச சந்தையில் அதிகரித்தது. இதனால், இந்தியாவிலும் பாமாயில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவியது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இந்தோனேசிய அதிபர் ஜோகோ விதோதோ கூறியதாவது:
உள்நாட்டில் பாமாயில் விலை குறைந்துவிட்டது. உள்நாட்டுத் தேவையைவிடவும் அதிகமாக உற்பத்தி உள்ளது. எனவே பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை இந்தோனேசியா நீக்குகிறது.
அடுத்து வரும் வாரங்களில் அதன் விலை குறைய வாய்ப்புள்ளது. பாமாயில் தொழிலை நம்பி விவசாயிகள் உள்பட 17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாட்டில் உள்ளனர். அவர்களின் நலன் கருதி மே 23 முதல் பாமாயில் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்றார்.
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 9:54 pm
சிந்து நதி நீரைப் பெற சர்வதேச அமைப்புகளிடம் முறையீடு: பாகிஸ்தான்
July 1, 2025, 3:55 pm
வெளிநாடுகளுக்கான நிதி உதவிகள் நிறுத்தம்: 14 மில்லியன் பேர் மரணிக்க கூடும்
July 1, 2025, 3:40 pm
தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து பேதொங்தார்ன் ஷினவாத்ரா தற்காலிகமாக நீக்கப்பட்டார்
July 1, 2025, 3:22 pm
வரி மசோதா நிறைவேற்றப்பட்டால் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவேன்: எலான் மஸ்க் உறுதி
July 1, 2025, 10:49 am
ஜூலை மாதத்தில் சிங்கப்பூரில் மின்சாரக் கட்டணம் குறைகிறது
June 29, 2025, 5:14 pm
சிங்கப்பூரில் இனி முதல்முறை ரத்த தானம் செய்வோர் வயது வரம்பு 60இலிருந்து 65க்கு உயர்கிறது
June 28, 2025, 1:47 pm