நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

இந்தியாவில் வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு சலுகை: அமைச்சர் அனுராக் தாக்குர்

புது டெல்லி:

இந்தியாவில் நடத்தப்படும் வெளிநாட்டு திரைப்பட படப்பிடிப்புகளுக்கு சலுகைககள் வழங்கப்படும் என கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்தார்.

கேன்ஸ் திரைப்பட சந்தையான "மார்ச்சே டு பிலிம்'இல் அமைக்கப்பட்டுள்ள இந்திய அரங்கை அவர் தொடக்கிவைத்து பேசியதாவது:

இந்தியாவில் ஒலி-ஒளி இணை தயாரிப்புக்கான ஊக்குவிப்புத் திட்டம், வெளிநாட்டுத் திரைப்படங்களை இந்தியாவில் படம்பிடிப்பதற்கான ஊக்குவிப்புத் திட்டம் என இரண்டு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி வெளிநாட்டுப் படங்களை இந்தியாவுடன் இணைந்து கூட்டாக தயாரிப்பதற்கு ரூ.2 கோடி வரையிலும், வெளிநாட்டுப் படங்களை இந்தியாவில் படம்பிடிக்க ரூ.2.5 கோடி வரையிலும் ஊக்கத்தொகை அளிக்கப்படும்.

அதாவது, கூட்டாக படம் தயாரிக்கும் சர்வதேச திரைப்பட நிறுவனங்கள் இந்தியாவில் ஏற்படக்கூடிய செலவினத்தில் 30 சதவீதம் வரை  திரும்பப் பெறலாம். வெளிநாட்டுத் திரைப்படங்களை இந்தியாவில் படம்பிடிப்பதற்கு 5 சதவீத ஊக்கத்தொகை அதாவது அதிகபட்சமாக ரூ.50 லட்சம் கூடுதலாக (65,000 அமெரிக்க டாலர்) திரும்பப் பெறலாம்  என்றார் அவர்.

Anurag Thakur at Cannes: India becoming 'content hub' of the world

நிகழ்ச்சியில் நடிகை தமன்னா பேசுகையில், இந்தியா தற்போது 75ஆவது ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், கேன்ஸ் திரைப்பட விழாவை இந்தியாவுடன் இணைந்து கொண்டாடுவது தனிச்சிறப்புமிக்கது என்றார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர் ஆர். மாதவன், பாடகர் மாமேகான், நடிகைகள் தீபிகா படுகோன், ஊர்வசி ரவுத்தேலா, பூஜா ஹெக்டே, வாணி திரிபாதி, இயக்குநர் சேகர் கபூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset