நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பழம்பெரும் இந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார்: தலைவர்கள் இரங்கல்

மும்பை:

பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா மும்பையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 89.

அண்மைக்காலமாக அவர் கடுமையான நோயால் அவதியுற்று இம்மாதத் தொடக்கத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறையில் இருந்த அவர் 300க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

He-Man of Bollywood என்ற பெயரும் அவருக்கு உண்டு.

அவர் ஆகக்கடைசியாக Ikkis என்ற படத்தில் நடித்தார். அது வரும் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் நடித்து மிகவும் புகழ்பெற்ற திரைப்படங்களில் ஒன்று Sholay; இது 1975ஆம் ஆண்டு வெளிவந்தது.

1935ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி பஞ்சாபில் பிறந்த தர்மேந்திரா 1960ஆம் ஆண்டு Dil Bhi Tera Hum Bhi Tere என்ற திரைப்படம் வாயிலாக இந்தித் திரையுலகில் நுழைந்தார்.

இந்தியாவின் 3ஆவது உயரிய விருதான பத்மபூஷன் விருதை இவர் கடந்த 2012ஆம் ஆண்டு பெற்றார்.

மறைந்த நடிகர் தர்மேந்திரா முதலில் பிரகாஷ் கோர் (Prakash Kaur) என்பவரைத் திருமணம் செய்து பிறகு தம்முடன் பல படங்களில் இணைந்து நடித்த நடிகை ஹேமமாலினியையும் மணந்தார்.

தர்மேந்திராவுக்கு 6 பிள்ளைகள் உள்ளனர்.

அவர்களில் சிலர் திரையுலகில் இருக்கின்றனர்.

நடிகர் தர்மேந்திரா மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset