நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பிரபல ஹாலிவுட் இயக்குநர் மரணம்: கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்

லாஸ் ஏஞ்சலிஸ்:

பிரபல ஹாலிவுட் இயக்குநரும் நடிகருமான ரோப் ரைனரும் (Rob Reiner) அவருடைய மனைவி மிஷெல் சிங்கரும் (Michelle Singer) வீட்டில் மாண்டு கிடந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அவர்களது உடல்களில் கத்திக்குத்துக் காயங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

இது தொடர்பாக குடும்ப உறுப்பினர் ஒருவர் விசாரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் திட்டமிட்ட கொலையாகக் கருதப்படுவதாய் லாஸ் ஏஞ்சலிஸ் காவல்துறைத் தலைவர் கூறினார்.

ரைனருக்கு வயது 78. அவர் மனைவி சிங்கருக்கு வயது 68.

திரு ரைனர் When Harry Met Sally, The Princess Bride, This is Spinal Tap போன்ற பிரபலமான திரைப்படங்களை இயக்கியவர்.

1970ஆம் ஆண்டுகளில் ஒளிபரப்பான All In The Family நகைச்சுவைத் தொடரில் Meathead எனும் கதாபாத்திரமாக நடித்து மக்களின் மனங்களைக் கவர்ந்தார்.

அவருடைய மறைவு மிகப்பெரிய இழப்பு என்று லாஸ் ஏஞ்சலிஸ் மேயர் கேரன் பாஸ் (Karen Bass) கூறினார்.

திரையுலகிற்கு மட்டுமல்லாமல் சமூக நீதிக்கும் அவர் பங்காற்றினார் என்று கேரன் பாஸ் குறிப்பிட்டார்.

ஆதாரம்: AP

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset