செய்திகள் கலைகள்
கில் ரீமேக்கிலிருந்து விலகுகிறார் துருவ் விக்ரம்
சென்னை:
ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய கவனம்பெற்ற கில் படத்தின் தமிழ் ரீமேக்கிலிருந்து துருவ் விக்ரம் விலகியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஹிந்தியில் கரண் ஜோஹர் தயாரிப்பில் நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில் (kill). 120 நிமிடங்களுக்கும் குறைவான நேரங்களே கொண்ட இப்படத்தில் இடம்பெற்ற சண்டைக்காட்சிகள் ரசிகர்களை இருக்கை நுனிக்கு அழைத்துச் சென்றதால் இந்தியாவில் உருவான சிறந்த ஆக்சன் படங்களில் ஒன்று என பாராட்டுகளைப் பெற்றது.
இதில் நாயகனாக லஷ்யா லால்வானி முக்கிய கதாபாத்திரத்தில் ராகவ் ஜுயல், தன்யா மணிக்த்லா, ஆசிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படத்தின் தென்னிந்திய ரீமேக் உரிமையைப் பெற்ற ரமேஷ் வர்மா தமிழ் ரீமேக்கில் நடிக்க ராகவா லாரன்ஸிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் ஆனால் அது தோல்வியில் முடிந்ததால் தமிழ் ரீமேக்கில் நடிகர் துருவ் விக்ரம் ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டது.
பைசன் திரைப்படத்தைத் தொடர்ந்து இதன் படப்பிடிப்பில் துருவ் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது கிடைத்த தகவல்படி, இப்படத்திலிருந்து நடிகர் துருவ் விலகிவிட்டாராம்.
பைசன் நல்ல பிம்பத்தைக் கொடுத்திருப்பதால் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனத் தெரிகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 24, 2025, 7:23 pm
பழம்பெரும் இந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார்: தலைவர்கள் இரங்கல்
November 21, 2025, 11:04 pm
டிசம்பர் 27ஆம் தேதி ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா: மலேசியா வருகிறார் விஜய்
November 19, 2025, 2:48 pm
நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்
November 19, 2025, 2:25 pm
திரைப்பட இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலி அனுமனை அவமதித்துவிட்டார்: வானர சேனா அமைப்பு போலிஸில் புகார்
November 17, 2025, 10:41 pm
நடிகை அதிதி ராவ் பெயரில் வாட்ஸ் அப் மூலம் மோசடி: எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள்
November 15, 2025, 3:49 pm
குழந்தைகள் நலனுக்கான யுனிசெஃப் தூதரானார் கீர்த்தி சுரேஷ்
November 13, 2025, 9:41 pm
சுசீலா அம்மாவுக்கு இன்று 90 வயது.
November 12, 2025, 12:52 pm
குழந்தைகள் தினத்தில் திரைக்கு வருகிறது 'கிணறு'
November 11, 2025, 7:30 pm
