செய்திகள் கலைகள்
தளபதி திருவிழாவிற்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது: உலகளாவிய ரசிகர்கள் மகத்தான ஆதரவு
கோலாலம்பூர்:
தளபதி திருவிழாவிற்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய வேளையில் இதற்கு உலகளாவிய ரசிகர்கள் மகத்தான ஆதரவை வழங்கி வருகின்றனர்.
தளபதி விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகியுள்ளது.
விஜய்யின் இறுதிப் படமான ஜனநாயகனுக்கு உலகளாவிய நிலையில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 27ஆம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ளது.
புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் கிட்டத்தட்ட 85 ஆயிரம் ரசிகர்கள் இந்த விழாவை நேரடியாக கண்டு களிக்க உள்ளனர்.
மாலை 3 மணிக்கு தளபதி திருவிழா எனும் மாபெரும் இசை விழா நடைபெறவுள்ளது.
அதைத் தொடர்ந்து இரவு ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெறவுள்ளது.
மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவன உரிமையாளர் டத்தோ அப்துல் மாலிக் இந்த விழாவிற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
மேலும் தளபதி விஜய் இந்த விழாவில் கலந்து கொள்ள இருப்பதால் அதற்கு மாபெரும் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்த தளபதி திருவிழாவிற்கான டிக்கெட்டுகள் இன்று பிற்பகல் முதல் விற்பனைக்கு வந்துள்ளது.
மலேசியாவைத் தவிர்த்து சர்வதேச நிலையில் இருந்து ரசிகர்கள் தற்போது டிக்கெட் விலை கொடுத்து இணையத்தின்வழி வாங்கி வருகின்றனர்.
விற்பனை தொடங்கிய குறுகிய நேரத்தில் அதிகமான ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர் என்று டத்தோ அப்துல் மாலிக் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:21 am
ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் காலமானார்
July 9, 2026, 2:38 pm
ரூ.70 கோடியைத் தாண்டிய ஆலியா பட்டின் ஆல்பா
July 7, 2026, 12:32 pm
பிரதீப் ரங்கநாதன் படத்தை இயக்கும் 6 இயக்குநர்கள்
July 2, 2026, 9:12 pm
இளையராஜாவின் காப்புரிமை வழக்கில் இடைக்கால தடையை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
June 30, 2026, 4:16 pm
பற்றிக்கொள்ள படர்ந்த அன்புக் கரங்களாக இருந்த அனைவருக்கும் நன்றி: சாந்தனு பாக்கியராஜ்
June 27, 2026, 12:33 pm
நடிகரும், இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமானார்
June 24, 2026, 10:20 pm
பத்ம பூஷன் விருது பெற்றார் நடிகர் மம்முட்டி
June 24, 2026, 4:13 pm
ரஜினிகாந்த்தின் தர்மன் திரைப்படத்தில் நடிகை ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்
June 22, 2026, 12:39 pm
