நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ஹைதராபாதில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சிலை திறப்பு

ஹைதராபாத்:

தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாதில் பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சிலை திறக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாதில் உள்ள அரசுக்கு சொந்தமான "ரவீந்திர பாரதி' என்ற கலாசார மையத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சிலையை தெலங்கானா மாநில தொழில் துறை அமைச்சர் டி.ஸ்ரீதர்பாபுவும் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடுவும்  திறந்துவைத்தனர்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசைப் பேரரசராகத் திகழ்ந்தார். அவர் தனது வாழ்நாளில் 40,000 பாடல்களைப் பாடியுள்ளார். ஜாதி, மத, பிராந்திய வேறுபாடுகளைக் கடந்து அவரது செல்வாக்கு பரவியிருந்தது.

அவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்தவுடன் அதை தெலங்கானா அரசு உடனடியாக ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிகழ்ச்சியில் ஹரியாணா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா,  எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண், சகோதரி எஸ்.பி.சைலஜா மற்றும் குடும்பத்தினர் முக்கியஸ்தர்கள், ரசிகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset