நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்த்

சென்னை:

ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் தனது 75 ஆவது பிறந்த நாளை நடிகர் ரஜினிகாந்த் கேக் வெட்டி கொண்டாடினார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிச.12) தனது 75வது பிறந்தாளை கொண்டாடுகிறார். தமிழ்த் திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டி பறக்கும் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர் நடிகைகளும், அவரது ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி படையப்பா படமும் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளதால், ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும், காலை முதலே அவரது வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி, சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் பின்னணி இசையுடன் விடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

அந்த விடியோவில், வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து கேக் வெட்டி இயக்குநர் நெல்சன் உள்பட ஜெயிலர் 2 படக்குழுவினருடன் இணைந்து நடிகர் ரஜினிகாந்த் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset