செய்திகள் கலைகள்
திரைப்பட விழாவில் சசிகுமாருக்கு ‘சிறந்த நடிகர்’ விருது
சென்னை:
சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிச.11-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி நிறைவடைந்தது. இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் தமிழக அரசுடன் இணைந்து நடத்திய இந்த 23-வது பட விழாவில் 51 நாடுகளைச் சேர்ந்த 122 திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
தமிழில் அலங்கு, பிடிமண், மாமன், மருதம், பறந்து போ, காதல் என்பது பொது உடைமை, மெட்ராஸ் மேட்னி, ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ், வேம்பு, டூரிஸ்ட் பேமிலி, பாட்ஷா, 3பிஹெச்கே ஆகிய 12 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. நிறைவு விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தில் நடித்த சசிகுமாருக்குச் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருது, ‘காதல் என்பது பொதுவுடைமை’ படத்துக்காக லிஜோமோல் ஜோஷுக்கு வழங்கப்பட்டது. சிறந்த தமிழ்ப்படத்துக்கான விருது ராமின் ‘பறந்து போ’ படத்துக்கு வழங்கப்பட்டது.
மற்ற விருது விவரம்:
இரண்டாவது சிறந்த படம் - டூரிஸ்ட் ஃபேமலி (அபிஷன் ஜீவிந்த்), சிறப்பு ஜூரி விருது- காளி வெங்கட் (மெட்ராஸ் மேட்னி), சிறப்பு ஜூரி விருது - ஷீலா ராஜ்குமார் (வேம்பு), சிறந்த ஒளிப்பதிவு - எஸ்.பாண்டி குமார் (அலங்கு) சிறந்த எடிட்டர் - நாகூர் ராமச்சந்திரன் (மாயக்கூத்து).
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:21 am
ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் காலமானார்
July 9, 2026, 2:38 pm
ரூ.70 கோடியைத் தாண்டிய ஆலியா பட்டின் ஆல்பா
July 7, 2026, 12:32 pm
பிரதீப் ரங்கநாதன் படத்தை இயக்கும் 6 இயக்குநர்கள்
July 2, 2026, 9:12 pm
இளையராஜாவின் காப்புரிமை வழக்கில் இடைக்கால தடையை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
June 30, 2026, 4:16 pm
பற்றிக்கொள்ள படர்ந்த அன்புக் கரங்களாக இருந்த அனைவருக்கும் நன்றி: சாந்தனு பாக்கியராஜ்
June 27, 2026, 12:33 pm
நடிகரும், இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமானார்
June 24, 2026, 10:20 pm
பத்ம பூஷன் விருது பெற்றார் நடிகர் மம்முட்டி
June 24, 2026, 4:13 pm
ரஜினிகாந்த்தின் தர்மன் திரைப்படத்தில் நடிகை ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்
June 22, 2026, 12:39 pm
